Thuthi Geethame Padiye

Album : | Artist :
வாழ்த்தி வணங்கிடுவோம்
ஜோதியின் தேவனாம்
இயேசுவைப் பணிந்திடுவோம்
1. தந்தைப் போல் நம்மைத் தாங்கியே
தோளில் ஏந்தி சுமந்தனரே
சேதம் ஏதும் அணுகிடாமல்
காத்த தேவனைத் துதித்திடுவோம்
2. காரிருள் போன்ற வேளையில்
பாரில் நம்மைத் தேற்றினாரே
நம்பினோரைத் தாங்கும் தேவன்
இன்றும் என்றுமாய் துதித்திடுவோம்
3. பஞ்சைப் போல் வெண்மை ஆகிட
பாவம் யாவும் நீக்கினாரே
சொந்த இரத்தம் சிந்தி நம்மை
மீட்ட தேவனைத் துதித்திடுவோம்
4. கட்டுகள் யாவும் அறுத்துமே
கண்ணீர் கவலை அகற்றினாரே
துதியின் ஆடை அருளிச் செய்த
தேவ தேவனைத் துதித்திடுவோம்
5. வானத்தில் இயேசு தோன்றிடுவார்
ஆயத்தமாகி ஏகிடுவோம்
அன்பர் இயேசு சாயல் அடைந்து
என்றும் மகிழ்ந்தே வாழ்த்திடுவோம்
Thuthi Geethame Padiye
Reviewed by Christking
on
February 17, 2018
Rating:
