Boomiyin kudikalae - பூமியின் குடிகளே கர்த்தரை

பூமியின் குடிகளே கர்த்தரை
கெம்பீரமாய் பாடுங்கள் போற்றுங்கள்
நடனமாடி துதித்திடுங்கள்
அல்லேலூயா தேவனே
அல்லேலூயா ராஜனே
அல்லேலூயா (4) அல்லேலூயா
மகிழ்ச்சியின் தொனியோடெ
கர்த்தரை ஆராதித்து
ஆனந்தக் களிப்புடனே
அவர் சமூகம் வாருங்களேன்
வாசல்களில் துதிகளோடும்
ஆலயத்தில் புகழ்ச்சியோடும்
அவர் நாமத்தை உயர்த்திடவே
ஆர்ப்பரித்து முழங்கிடுவோம்
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை
என்னென்றும் நித்தியமாய்
அது உன்னை தலைமுறைக்கும்
நிச்சயமாய் வழிநடத்தும்
Boomiyin kudikalae - பூமியின் குடிகளே கர்த்தரை
Reviewed by Christking
on
February 21, 2018
Rating:
