Aandavaa Undran Sevaikadiyen

Album : | Artist :
ஆண்டவா உன்றன் சேவைக்கடியேன் அர்ப்பணஞ் செய்யத்
தூண்டும் உன் ஆவி அருள்வாய்
என்னைத் தியாகிக்க ஏவும்
உன் அனல் மூட்டிடுவாய்
இந்நிலம் தன்னில் மாளும்
மனுமக்கள் மீட்பிற்காக
பிசிக்கப் பண்டமில்லாமல்
பூவில் இல்லமுமே அன்றி
நசிந்து நலிந்து நாட்டில்
கசிந்து கண்ணீர் சொரிந்து
தேச மெல்லாம் தியங்கும்
நேச மக்கள் சேவைக்கே
நிமலா எனை ஏற்றுக்கொள்
வறுமை வங்கடன் வியாதி
குருட்டாட்ட்டம் கட்சி கடும்
அறிவீனம் அந்தகாரம்
மருள் மூடி மக்கள் வாடும்
தருணம் இக்காலமதால்
குருநாதா உனதன்பை
அருள்வாய் அடியேனுக்கே
அருமை ரட்சகா உன்றன்
அரும்பாடு கண்ணீர் தியாகம்
பேரன்பு பாரச் சிலுவை
சருவமும் கண்ட என்றன்
இருதயம் தைந்துருகி
வெறும் பேச்சாய் நின்றிடாமல்
தருணம் எனையே தந்தேன்
உலகே உனதாயினும்
தலை சாய்க்கத் தாவில்லாமல்
நலமே புரிந்து திரிந்தாய்
எல்லாம் துறந்து யான் உன்
நல்லாவி கொண்டுழைக்க
வல்லா உனின் சிலுவை
அல்லால் வழி வேறுண்டா
Aandavaa Undran Sevaikadiyen
Reviewed by Christking
on
February 27, 2018
Rating:
