Uthithare Nalla Meipar - Lyrics
உதித்தாரே நல்ல மேய்ப்பர் புல்லணை மீதினிலே
விண்ணகம் துறந்து மண்ணகம் வந்த
இம்மானுவேலன் இவர் தானே
விண்ணிலே தேவனுக்கே மகிமை
பூமியிலே நல் சமாதானம்
மானிடர் மேல் பிரியமும்
இன்றும் என்றும் உண்டாவதாக
மந்தையை காத்த மேய்ப்பர்களும்
சிந்தையில் சிறந்த ஞானியரும்
பாலனை சென்று பணிந்தனரே
நல் காணிக்கை அவருக்குப் படைத்தனரே
உன்னையும் என்னையும் மீட்டிடவே
பூமியில் வந்த அதிசயமே
எண்ணில் அடங்கா நன்றியுடன்
அவரைப் போற்றி துதித்திடுவோம் --- உதித்தாரே
அன்பே அவரின் திருமொழியாய்
பண்பில் சிறந்த போதகராய்
நம்மை அணைத்துக் காத்திடவே
ஏழையின் கோலம் எடுத்தாரே
விண்ணவர் வாழ்த்தொலி கேட்கிறதே
எண்ணில்லா ஆனந்தம் பெருகிடுதே
வல்லவர் இயேசு பிறந்த நாளில்
வாழ்த்துக்கள் சொல்லி மகிழ்ந்திடுவோம் --- உதித்தாரே
Uthithare Nalla Meipar - Lyrics
Reviewed by Christking
on
January 05, 2018
Rating: