Perumazhai Peruvellam Varapoguthu : Lyrics
Praise And Worship Song
Perumazhai Peruvellam Varapoguthu
பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது
விரைவில் வரப்போகுது
வந்துவிடு நுழைந்துவிடு – இயேசு
இராஜாவின் பேழைக்குள் – நீ
1. மலைகள் அமிழ்ந்தன எல்லா
உயிர்களும் மாண்டன
பேழையோ உயர்ந்தது
மேலே மிதந்தது வந்துவிடு – பெருமழை
2. குடும்பமாய் பேழைக்குள்
எட்டுப்பேர் நுழைந்தனர்
கர்த்தரோ மறவாமல்
நினைவு கூர்ந்தாரே – பெருமழை
3. நீதிமானாய் இருந்ததால்
உத்தமானாய் வாழ்ந்ததால் – நோவா
கர்த்தரோடு நடந்ததால்
கிருபை கிடைத்தது – பெருமழை
4. பெருங்காற்று வீசச் செய்தார்
தண்ணீர் வற்றச் செய்தார்
நோவா பீடம் கட்டி
துதி பலி செலுத்தினார் – பெருமழை
Perumazhai Peruvellam Varapoguthu : Lyrics
Reviewed by Christking
on
September 23, 2017
Rating: