தசமபாகம்!

ஒரு ராஜா காட்டின் வழியாகச் செல்லும்போது, ஒரு ஏழை மனிதனைக் கண்டார். மனதுருகினார். தன்னுடைய மணிபர்சிலுள்ள பத்து பொற்காசை எடுத்து அதிலே ஒன்பது பொற்காசை அந்த ஏழைக்கு கொடுத்து, இதை வைத்து உன்னுடைய குடும்பத்தை நடத்து. மீதி ஒரு பொற்காசு மட்டுமே எனக்கு இருக்கிறது. நான் வீடு போய்ச் சேர அதை பயன்படுத்துவேன் என்றார்.
சற்று தூரம் அந்த ராஜா சென்றவுடனே, ஏழையாய் இருந்த வனுடைய உள்ளத்தில் பேராசை வந்தது. அந்த ஒரு பொற்காசையும் அவரிடத்திலிருந்து அபகரித்துக்கொண்டால், என்ன என்று எண்ணினான். ஆகவே அந்த ராஜாவுக்கு பின்பாக யாருக்கும் தெரியாமல் ஒளிந்து போய் ஒரு கட்டையால் அவரைத் தாக்கி, அவருடைய மணிபர்சிலிருந்த ஒரு பொற்காசையும் அபகரித்துக் கொண்டான். அடிப்பட்டு கீழே விழுந்த அந்த இரக்கமுள்ள ராஜா என்ன நினைத்திருப்பார் என்று எண்ணிப் பாருங்கள்.
அதைப் போலத்தான், கர்த்தர் உங்களுக்கு ஜீவன், சுகம், பெலன், எல்லாம் கொடுத்து, பத்தில் ஒன்பது பாகங்களை தயவாய் தந்தருளுகிறார். மீதி ஒரு பங்கைத்தான் அவருடைய பணிக்கென்று அவர் கேட்கிறார். அந்தப் பணத்தை நீங்கள் வஞ்சிக்க நினைக்கும்போது, கர்த்தருடைய ஊழியத்திற்கு அது எவ்வளவு பெரிய இழப்பா# இருக்கும்?
ஏன் தசமபாகம் செலுத்துகிறோம்? முதலாவது கர்த்தர் மேலுள்ள அன்பினால், நன்றியறிதலுக்காக, தசமபாகம் செலுத்துகிறோம். ஏற்கெனவே நாம் கர்த்தருடைய கரத்திலிருந்து ஆசீர்வதிக்கப்பட்டிருப் பதால், அந்த ஆசீர்வாதத்தின் ஒரு பகுதியை, ஆசீர்வாதத்திற்கு காரணமாய் இருக்கிற தேவனுக்கு கொடுக்க வேண்டாமா?
பலர் குத்தகை எடுத்திருப்பார்கள். அந்த குத்தகையை ஒழுங்காய் செலுத்துவார்கள்! ஆனால் கர்த்தருக்கு தசமபாகம் செலுத்துவதற்கு அவர்களுக்குப் பிரியம் வராது. இன்னும் சிலர் வட்டிக்கு கடன் வாங்கு வார்கள். அந்த வட்டியையெல்லாம் ஒழுங்காகக் கட்டுவார்கள். ஆனால் கர்த்தருக்குக் கொடுக்க பிரியம் வராது.
தேவபிள்ளைகளே, கர்த்தருக்கு தசமபாகம் கொடுப்பது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியின் அனுபவமாய் இருக்கட்டும். தசமபாகம் செலுத்துவதில் எந்தச் சாக்குப்போக்கும் சொல்லாதிருங்கள்.
தசமபாகம்!
Reviewed by Christking
on
August 04, 2017
Rating:
