அன்பு விலகுவதில்லை! - Christking - Lyrics

அன்பு விலகுவதில்லை!


“தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்பு வைத்த படியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்பு வைத்தார்” (யோவா. 13:1).

ஒரு தமிழ் குடும்பம் பர்மாவில் செல்வச் சிறப்போடு வாழ்ந்து வந்தது. ஆனால் திடீரென்று பர்மா அரசாங்கத்தில் வந்த மாறுதலால், இவர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கால்நடையாக பல இடங் களுக்கு நடந்து, முடிவில் தமிழ்நாடு வந்து சேர வேண்டியதாயிற்று. வறுமையிலும் அந்தக் கணவன், தன் மனைவியையும், மகனையும் நேசித்து, அன்பு செலுத்தினார்.

ஆனால் மனைவியோ, ஒருநாள், செய்தித்தாளில், “ஓர் உயர்ந்த பணக்காரனுக்கு இரண்டாந்தரமாக ஒரு பெண் தேவை” என்ற விளம்பரத்தைப் பார்த்து, தன் அன்பு கணவனையும், பிள்ளைகளையும் விட்டுவிட்டு செல்வந்தனிடம் ஓடிவிட்டாள். அந்தக் கணவனின் உள்ளம், சுக்குநூறாய் உடைந்தது; தேம்பித் தேம்பி அழுது, ஆறுதலற்றவரானார்.

கவலையும், கண்ணீரும், துரோகமும் நிறைந்த இந்த உலகில், விலகாத அன்போடு நம்மை நேசிக்கிறவர் இயேசு ஒருவர்தான். அந்த அன்பு, மறுதலித்த பேதுருவின் உள்ளத்தை உடைத்தது. மனங்கசந்து அழ வைத்தது. அந்த அன்பு, ஒவ்வொரு சீஷனையும் கிறிஸ்துவுக்காக இரத்த சாட்சியாக மரிக்க உற்சாகப்படுத்தியது!

ஆம்; இயேசு மாறாத அன்புடையவர்; முடிவுபரிந்தமும் அன்பு வைக்கிறவர். அன்பின் நிமித்தமாக, தாமிருக்கும் இடத்தில், நாமும் இருக்கும்படி, நித்திய வாசஸ்தலத்தை நமக்காக ஏற்படுத்தியவர்!

அன்புக்காக ஏங்கும் தேவபிள்ளைகளே, இயேசுவின் அன்பை ருசித்துப் பாருங்கள்! அவர் அன்புள்ளவர் மட்டுமல்ல, உங்கள் அன்புக்காக ஏங்குகிறவரும்கூட!

“அன்பு அயோக்கியமானதைச் செய்யாது; தற்பொழிவை நாடாது” (1கொரி. 13:5).

Stories, Tamil Christian Stories,
அன்பு விலகுவதில்லை! அன்பு விலகுவதில்லை! Reviewed by Christking on August 15, 2017 Rating: 5
Powered by Blogger.