அன்பும் அன்னதானமும்!
“எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம் பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை” (1கொரி. 13:3).
வட இந்தியாவுக்கு மிஷனெரியாக செல்லுமுன், ஒரு சகோதரன் தன்னை தெய்வீக அன்புக்கு ஒப்புக்கொடுத்து, இவ்விதமாய் அர்ப்பணித்துக் கொண்டாராம்.
“நான் ஹிந்தி, உருது பாஷைகளையும், ஆதிவாசிகளின் மொழி களையும் பேசினாலும், வட இந்திய மக்கள் மேல், உண்மையான அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன்.
நான் வேதாகமக் கல்லூரியில் படித்திருந்து, பல பட்டங்கள் பெற்றிருந்தாலும், என்னை நானே டாக்டர் என்றும், போதகர் என்றும், குருவானவர் என்றும், மிஷனெரி என்றும் அழைத்துக் கொண்டாலும், கல்வாரி அன்பு என் உள்ளத்தில் இல்லாவிட்டால், நான் ஒன்றுமில்லை. நான் மிஷனெரி பணியிலிருக்கிறேன். தியாகமாய் ஊழியம் செய்கிறேன், என்றெல்லாம் விளம்பரப்படுத்திக் கொண்டாலும், ஆதி வாசிகளைப் பற்றிய புள்ளி விவரங்களை, அள்ளி அள்ளிக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால், எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.
நான் சுகமளிக்கிற வரமுள்ளவனாயிருந்து, பில்லிசூனியக் கட்டுகளை உடைத்து, ஆயிரம் பிசாசுகளைத் துரத்தினாலும், அற்புதங் களைச் செய்து, ஜனங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும், அன்புள்ள கிறிஸ்துவை அவர்களுக்கு அறிமுகம் செய்யாவிட்டால், எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை.
எனது ஊழியங்களைப் பற்றி, கட்டுரைகள் எழுதினாலும், பத்திரிக்கை நடத்தி, புத்தகம் வெளியிட்டாலும், கல்வாரி அன்பை நான் வெளிப்படுத்தாவிட்டால், என் முயற்சிகளால் பிரயோஜனம் ஒன்று மில்லை.”
அன்பும் அன்னதானமும்!
Reviewed by Christking
on
August 11, 2017
Rating: