Thevanae Naan Umathandaiyil : Tamil Lyrics

தேவனே நான் உமதண்டையில் இன்னும்
நெருங்கி சேர்வதே என் ஆவல் பூமியில்
மாவலிய கோரமாக
வன் சிலுவை மீதினில் நான்
கோவே தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்
1. யாக்கோபைப்போல் போகும் பாதையில்
பொழுதுபட்டு ராவில் இருள் வந்து மூடிட
துக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து
தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன்
வாக்கடங்கா வல்ல நாதா!
2. பரத்துக்கேறும் படிகள் போலவே
என் பாதை தோன்றப்பண்ணும் ஐயா
எந்தன் தேவனே கிருபையாக
நீர் எனக்குத்தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைக்கும்
அன்பின் தூதராக செய்யும்
3. நித்திரையினின்று விழித்து காலை எழுந்து
கர்த்தாவே நான் உம்மைப் போற்றுவேன்
இத்தரையில் உந்தன் வீடாய்
என்துயர் கல் நாட்டுவேனே
எந்தன் துன்பத்தின் வழியாய்
இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்
4. ஆனந்தமாய் செட்டை விரித்துப்
பரவசமாய் ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே
சென்றிடினும் மகிழ்வுறு காலத்திலும் நான்
மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன்
Song : Thevanae Naan Umathandaiyil
Artist :
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
Thevanae Naan Umathandaiyil : Tamil Lyrics
Reviewed by Christking
on
December 06, 2016
Rating:

No comments: