Kappar Unnai Kappar : Tamil Lyrics

காப்பார் உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார் இன்னும்
இனிமேலும் காத்திடுவார்
கலங்காதே மனமே காத்திடுவார்
1. கண்டுன்னை அழைத்தவர் கரமதைப் பார்
உன்னைக் கைவிடாதிருப்பார்
ஆண்டுகள் தோறும் உனக்கவர்
அளித்த ஆசிகளை எண்ணிப்பார்
எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்
என்றும் அதை எண்ணிப்பார் (2)
2. இஸ்ரவேலுக்கு வாக்குப்படி
இன்பக்கானான் அளிக்கவில்லையோ
இப்போ நினிவேயை நிர்மூலம்
செய்வதென்று பின்னும் இரங்கவில்லையோ
இல்லையோ இல்லையோ இல்லையோ
மனஸ்தாபம் கொள்ளவில்லையோ
3. ஆதரவாய் பல ஆண்டுகளில்
பரன் அடைக்கலமாயிருந்தார்
காதலுடனவர் கைப்பணி செய்திட
கனிவுடன் ஆதரித்தார்
ஆதரித்தார் ஆதரித்தார் ஆதரித்தார்
பரிசுத்தத்தில் அலங்கரித்தார் (2)
Song : Kappar Unnai Kappar
Artist : D.G.S. Dhinakran
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
Kappar Unnai Kappar : Tamil Lyrics
Reviewed by Christking
on
December 06, 2016
Rating:

No comments: