Dasarea Indha Tharaneiai Anbaiyai : Lyrics - Christking - Lyrics

Dasarea Indha Tharaneiai Anbaiyai : Lyrics


தாசரே இத்தரணியை அன்பாய்
இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம்
நேசமாய் இயேசுவைக் கூறுவோம்
அவரைக் காண்பிப்போம் - மாவிருள்
நீக்குவோம் வெளிச்சம் வீசுவோம்

1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரை
வருந்தியன்பாய் அழைத்திடுவோம்
உரித்தாய் இயேசு பாவப் பாரத்தை
நமது துக்கத்தை நமது துன்பத்தைச்சுமந்து தீர்த்தாரே

2. பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்
பட்சமாக உதவி செய்வோம்
உசித நன்மைகள் நிறைந்து - தமை
மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே

3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை
நீசரை நாம் உயர்த்திடுவோம்
பொறுக்கவொண்ணா கஷ்டத்துக்குள்
நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே

4. இந்திய தேச மாது சிரோமணிகள்
விந்தை ஒளிக்குள் வரவழைப்போம்
சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து
நிர்ப்பந்தங்கள் தீர்த்து சிறந்திலங்கிட

5. மார்க்கம் தப்பி நடப்போரை சத்ய வழிக்குள்
வந்திடச் சேர்த்திடுவோம் - ஊக்கமாக
ஜெபித்திடுவோம் நாம் முயன்றிடுவோம்
நாம் உழைத்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம்

Songs Description :
Song : Dasarea Indha Tharaneiai Anbaiyai
Artist :
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
Dasarea Indha Tharaneiai Anbaiyai : Lyrics Dasarea Indha Tharaneiai Anbaiyai  : Lyrics Reviewed by Christking on December 05, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.