Malaiyil tutippom makilvutane : Lyrics

மலையில் துதிப்போம் மகிழ்வுடனே மனக்களிப்புடனே
மாண்புகழ் ஏசுவை வானவரோடே
சரணங்கள்
1. காலை மாலை உறங்காரோ நம்
காவலனாய் இருப்பாரே
ஆவலுடன் துதி சாற்றிடுவீரே - மாலை
2. கிருபையின் வாக்கு தந்தாரே - அதை
அருமையாய் நிறைவேற்றினாரே
உரிமையுடன் புகழ் சாற்றிடுவீரா – மாலை
3. சோதனை வந்திட்ட நேரம் அவர்
போதனை செய்தார் அந்நேரம்
சாதனையாகவே நிற்கச் செய்தாரே - மாலை
4. அழைத்த மெய் அழைப்பிலே தானே - நாம்
உழைத்திட பெலன் தந்ததேனோ
பிழைத்திட ஜீவன் கிறிஸ்துவில் தானே - மாலை
5. வயல் நிலம் ஏராளம் காட்டி - அதின்
அறுவடை தாராளம் ஏற்றி
அரிக்கட்டோடே வர கிருபை செய்தாரே - மாலை
6. ஆணி துளைத்திடதானே தன்னை
தியாகமாய் கொடுத்திட்ட தேனே
ஏகமாய் யேசுவின் நாமத்தைத்தானே - மாலை
7. ஆய்ரம் நாவிருந்தாலும் அவர்
அன்பைத் துதிக்கப்போதாது
பதினாயிரம் பேரில் சிறந்தவரை நாம் - மாலை
8. உன்னதருக்கு மகிமை இந்தப்
பூமியிலே சமாதானம்
மனுஷரில் பிரியம் உண்டாகச் செய்தாரே - மாலை
Malaiyil tutippom makilvutane : Lyrics
Reviewed by Christking
on
July 12, 2016
Rating:
