Kirubaiye Unnai Innal : Lyrics - Christking - Lyrics

Kirubaiye Unnai Innal : Lyrics

Kirubaiye Unnai Innal

கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது
என் கிருபையே

1. பாதையில் கஷ்டம் அணுகிடும் போது
பங்கம் வராது நான் உன்னைத் தாங்கினேன்
பெலன் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான்
எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த – கிருபையே

2. சோதனையாலே சோர்ந்திடும்போது
சொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன்
ஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன்
ஜெயகீதங்கள் பாடவைத்திட்டேன் – கிருபையே

3. ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே
ஏங்கும்போது உன் அண்டை வந்திட்டேன்
ஏற்ற நல்துணையை ஈந்திட்டேன் அல்லோ நான்
என்றும் உன்னை என் சொந்தமாக்கினேன் – கிருபையே

4. ஜெயமான பாதை சென்றிடச் செய்தேன்
செப்பமாக உன் கரம் பிடித்தேன்
ஜெய ஜெயகீதங்கள் தொனித்திடச் செய்தேனே
சேவை செய்யவும் கிருபை தந்தேனே – கிருபையே

5. என்றென்றுமாக என் கிருபை காட்ட
கொண்டேன் உன்னை இம்மண்னில் பிரித்து
என் அரும் மகனே காப்பேனே உன்னை நான்
உன் தந்தை நான் உன்னை விடேனே – கிருபையே

Worship Songs Lyrics,
Kirubaiye Unnai Innal : Lyrics Kirubaiye Unnai Innal : Lyrics Reviewed by Christking on July 07, 2016 Rating: 5
Powered by Blogger.