Kiristhuvin Adaikalathil : Lyrics

கிறிஸ்துவின் அடைக்கலத்தில்
சிலுவையின் மாநிழலில்
கன்மலை வெடிப்பதனில்
புகலிடம் கண்டு கொண்டோம்
1. கர்ச்சிக்கும் சிங்கங்களும்
ஓநாயின் கூட்டங்களும்
ஆடிடைக் குடிலினில்
மந்தைகள் நடுவினில்
நெருங்கவும் முடியாது
2. இரட்சிப்பின் கீதங்களும்
மகிழ்ச்சியின் சப்தங்களும்
கார்மேக இருட்டினில்
தீபமாய் இலங்கிடும்
கர்த்தரால் இசை வளரும்
3. தேவனின் இராஜ்ஜியத்தை
திசை எங்கும் விரிவாக்கிடும்
ஆசையில் ஜெபித்திடும்
அதற்கென்றே வாழ்ந்திடும்
யாருக்கும் கலக்கம் இல்லை
4. பொல்லோனின் பொறாமைகளும்
மறைவான சதி பலவும்
வல்லோனின் கரத்தினில்
வரை படமாயுள்ள
யாரையும் அணுகாது
Kiristhuvin Adaikalathil : Lyrics
Reviewed by Christking
on
July 07, 2016
Rating:
