Karam Pidithu Unnai Yendrum : Lyrics

கரம் பிடித்து உன்னை
என்றும் நடத்திடுவார்
கண்மணி போல் உன்னை
என்றும் நடத்திடுவார்
கலங்கிடாதே திகைத்திடாதே
கர்த்தர் கரம் உனக்கு உண்டு பயந்திடாதே
படுகுழியில் நீ விழுந்தாலும்
பரத்திலிருந்து வந்து
உன்னை தூக்கிடுவார்
அக்கினியில் நீ நடந்தாலும்
எதுவும் உன்னை சேதப்படுத்த முடியாதே – கலங்கிடாதே
ஆறுகளை நீ கடந்தாலும்
அவைகள் என்றும் உன்
மீது புரள்வதில்லை
காரிருளில் நீ நடந்தாலும்
பாதைக்கு வெளிச்சமாக இருப்பாரே – கலங்கிடாதே
சுழல் காற்று உன்னை சூழ்ந்தாலும்
அவர் கிருபை உன்னை
என்றும் தாங்கிடுமே
சோதனையில் நீ அமிழ்ந்தாலும்
சோர்ந்திடாதே உன்னை
அவர் அணைப்பாரே – கலங்கிடாதே
Karam Pidithu Unnai Yendrum : Lyrics
Reviewed by Christking
on
July 24, 2016
Rating:
