Kadalin Alathile : Lyrics - Christking - Lyrics

Kadalin Alathile : Lyrics

Kadalin Alathile

கடலின் ஆழத்திலே மூழ்கி போன யோனா நான்
கண்ணோக்கி பார்த்திடுமே இயேசையா
கண்ணோக்கி பார்த்திடுமே
நீர் இரக்கமும் உருக்கமும்
நீடிய சாந்தமும் கிருபையும் உள்ளவரே
என் இயேசையா கிருபையும் உள்ளவரே

1. தர்ஷிசுக்கு ஓடி போன யோனாவை மீட்டிரே
என்னையும் மீட்டுக் கொள்ளும் என் இயேசையா
என்னையும் மீட்டுக்கொள்ளும்
அழிவில் இருந்து நினிவேயை ரட்சித்தீரே
எங்களையும் ரட்சித்து கொள்ளும்
என் இயேசையா எங்களையும் ரட்சித்து கொள்ளும்

2. மீனின் வயிற்றிலிருந்த யோனாவின் ஜெபத்தைக் கேட்டீர்
என் ஜெபமும் கேட்டருளும் என் இயேசையா
என் ஜெபமும் கேட்டருளும்
இரட்டுடுத்தி ஜெபித்த நினிவேயின் ஜெபம் கேட்டீர்
எங்கள் ஜெபம் கேட்டருளும் என் இயேசையா
எங்கள் ஜெபம் கேட்டருளும்

3. யோனாவின் சத்தத்தை நினிவே கேட்டது போல்
என் தேசம் கேட்கணுமே என் இயேசையா
என் ஜனம் கேட்கணுமே
நினிவேக்கு கிடைத்த கிருபை போல
எங்களுக்கும் கிருபை தாருமே
என் இயேசையா எங்களுக்கும் கிருபை தாருமே

Worship Songs Lyrics,
Kadalin Alathile : Lyrics Kadalin Alathile : Lyrics Reviewed by Christking on July 24, 2016 Rating: 5
Powered by Blogger.