Idhayam Kozhundhai Eriyum : Lyrics - Christking - Lyrics

Idhayam Kozhundhai Eriyum : Lyrics

Idhayam Kozhundhai Eriyum Podhu

இதயம் கொழுந்தாய் எரியும் போது
இயேசு என்னை இயக்கிடுவாரே
இல்லம் அன்பாய் நிறையும் போது
உன்னத தேவன் பேசிடுவாரே
எலியா போல எழும்பும் போது
தேசம் இன்றே மாறியே போகும்
கலங்கும் மக்கள் கதறும் போது
கர்த்தர் தூக்கி நிறுத்திடுவாதே

இயேசு மட்டும் தெய்வம் என்று
உலக மக்கள் அறிந்திட வேண்டும்
பாவம் சாபம் யாவும் நீங்க
பரிசுத்த இரத்தம் கழுவிட வேண்டும்
உம்மைப் போல நல்ல தெய்வம்
யாரும் இல்லை என்றும் இல்லை
உமக்கு ஒப்பாய் தேவனில்லை
கர்த்தர் நீரே உன்மை தேவன்

வானம் பூமி மாறினாலும்
தேவ வார்த்தை மாறுவதில்லை
பாதை எல்லாம் வெளிச்சமாகும்
வழிகள் எல்லாம் தீபங்களாகும்
வேதம் ஒன்றே வாழ வைக்கும்
வேதம் உன்னை உயர வைக்கும்
வல்லமை இறங்கும் வல்லமை இறங்கும்
பரிசுத்த ஆவியின் வல்லமை இறங்கும்

Worship Songs Lyrics,
Idhayam Kozhundhai Eriyum : Lyrics Idhayam Kozhundhai Eriyum : Lyrics Reviewed by Christking on July 24, 2016 Rating: 5
Powered by Blogger.