Ezhai Enthan : Lyrics

ஏழை எந்தன் மீது அன்பு தேவா
ஏன் இத்தனை அன்பு சொல்லும் நாதா
பாவியான எந்தன் மீது நாதா
ஏன் இத்தனை பாசம் சொல்லும் தேவா!!!
1. வயிராம் தாய் வயிற்றில் கருவாய் உருவாகு முன்னே
பேர் சொல்லி எனை அழைத்து தெரிந்து கொண்ட விதம் நினைத்து
அலைந்து அலைந்து உலகில் திரிந்த என்னை தெரிந்து கொண்டதை நினைத்து
பாடிட நாவு போதாது தேவா உம் பாசத்துக்கு இணை ஏது நாதா!!
2. உளையான பாவ சேற்றில் உழன்று அமிழ்ந்து கிடந்த என்னை
தூக்கியே மனிதனாக நிறுத்திய உம் அன்பை நினைத்து
பணிந்து குனிந்து உணர்ந்து உள்ள நன்றியோடு உம்மை நினைத்து
நன்றிகள் கோடி சொல்வேன் தேவா
உம் பாதம் என்றும் சரணம் அன்பு நாதா!!
3. எத்தனையோ நன்மைகளை உம்மால் நான் பெற்றிருந்தும்
அத்தனையும் மறந்து நான் எத்தனமாய் வாழ்ந்ததேனோ
அற்பனும் சொற்பனும் குப்பையும் என்னை தற்பரன் தெரிந்து கொண்டதை நினைத்து
துதித்திட நாவு போதா தேவா உம் மகிமைக்கு அளவு இல்லை நாதா
Ezhai Enthan : Lyrics
Reviewed by Christking
on
July 25, 2016
Rating:
