Enthan Jeba Velai Umai Thedi Vanthen : Lyrics

எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
தேவா பதில் தாருமே
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
உம்மை நான் நாடி வந்தேன் - (2)
1. சோராது ஜெபித்திட
ஜெப ஆவி வரம் தாருமே
தடையாவும் அகற்றிடுமே
தயை கேட்டு உம்பாதம் வந்தேன்
2. உம்மோடு எந்நாளும்
உறவாட அருள் செய்யுமே
கர்த்தாவே உம் வார்த்தையை
கேட்டிட காத்திருப்பேன்
3. நம்பிக்கை இல்லாமல்
அழிகின்ற மாந்தர்தனை
மீட்டிடும் என் இயேசுவே
போராடி ஜெபிக்கின்றேன் நாதா
4. நாளெல்லாம் பாதத்தில்
கர்த்தாவே காத்திருப்பேன்
கண்ணீரின் ஜெபம் கேளுமே
கருணையின் பிரவாகம் நீரே
Enthan Jeba Velai Umai Thedi Vanthen : Lyrics
Reviewed by Christking
on
July 25, 2016
Rating:
