En Meiparai Yesu - என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது : Lyrics - Christking - Lyrics

En Meiparai Yesu - என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது : Lyrics

En Meiparai Yesu

என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது
என் வாழ்விலே குறைகள் என்பது எது?

1. என்னை அவர் பசும்புல் பூமியிலே
எந்நேரமும் நடத்திடும் போதினிலே
என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம்
ஆஹா என்றென்றும் இன்பமல்லவா

2. தம் பாதையில் என்னை நடத்திடவே
என் கரத்தை பிடித்தே முன் நடப்பார்
அஞ்சிடேனே நான் அஞ்சிடேனே
நான் ஒன்றுக்கும் அஞ்சிடேனே

3. என்னோடவர் நடந்திடும் போதினிலே
எங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி
ஆஹா எங்கெங்கும் ஒளியல்லவா

4. என்னை அவர் அன்பால் நிரப்பியதால்
எல்லோருக்கும் நண்பராய் ஆகியதால்
என்னுள்ளமே ஆஹா என் தேவனே ஆஹா
எந்நாளும் புகழ்ந்திடுவேன்

5. என் வாழ்க்கையை தூய்மையாய் காத்துக்கொள்ள
என்னை என்றும் போதித்து நடத்துகின்றார்
என் கிரீடத்தை நான் பெற்றுக்கொள்ள
என் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்

6. விண்மீதினில் வேகம் தம் வருகைக்காய்
என்னையவர் ஆயத்தமாக்கினார்
என்னானந்தம் ஆஹா என்னானந்தம்
எனக்கென்றும் பேரானந்தமே

Worship Songs Lyrics,
En Meiparai Yesu - என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது : Lyrics En Meiparai Yesu - என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்றபோது : Lyrics Reviewed by Christking on March 08, 2018 Rating: 5
Powered by Blogger.