Palarae Or Nesar – பாலரே ஓர் நேசர் உண்டு : Lyrics - Christking - Lyrics

Palarae Or Nesar – பாலரே ஓர் நேசர் உண்டு : Lyrics

Palarae Or Nesar

பாலரே, ஓர் நேசர் உண்டு விண் மோட்ச வீட்டிலே
நீங்கா இந்நேசர் அன்பு ஓர் நாளும் குன்றாதே
உற்றாரின் நேசம் யாவும் நாள் செல்ல மாறினும்
இவ்வன்பர் திவ்விய நேசம் மாறாமல் நிலைக்கும்

1. பாலரே, ஓர் வீடு உண்டு விண் மோட்ச வீட்டிலே
பேர் வாழ்வுண்டாக இயேசு அங்கரசாள்வாரே
ஒப்பற்ற அந்த வீட்டை நாம் நாட வேண்டாமோ?
அங்குளளோர் இன்ப வாழ்வில் ஓர் தாழ்ச்சிதானுண்டோ

2. பாலரே, ஓர் கிரீடம் உண்டு விண் மோட்ச வீட்டிலே
நல் மீட்பரின் பேரன்பால் பொற்கிரீடம் அணிவீர்
இப்போது மீட்பைப் பெற்று மா நேசர் பின்சென்றார்
இவ்வாடா ஜீவ கிரீடம் அப்போது சூடுவார்

3. பாலரே, ஓர் கீதம் உண்டு விண் மோட்ச வீட்டிலே
மா ஜெய கீதம் பாட ஓர் வீணையும் உண்டே
அந்நாட்டின் இன்பம் எல்லாம் நம் மீட்பர்க்குரிமை
நீர் அவரிடம் வாரும், ஈவார் அவ்வின்பத்தை

Worship Songs Lyrics,David
Palarae Or Nesar – பாலரே ஓர் நேசர் உண்டு : Lyrics Palarae Or Nesar – பாலரே ஓர் நேசர் உண்டு : Lyrics Reviewed by Christking on June 09, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.