Nenje Nee Kalanguvatheno – நெஞ்சே நீ கலங்குவதேனோ : Lyrics - Christking - Lyrics

Nenje Nee Kalanguvatheno – நெஞ்சே நீ கலங்குவதேனோ : Lyrics

Nenje Nee Kalanguvatheno

நெஞ்சே நீ கலங்குவதேனோ …(2)
நெஞ்சே நீ தவிப்பதேனோ …
ஒரு கணம் கூட உன் சுமை தாங்க
கருணையின் தேவன் தயங்குவதில்லை

1. தளர்ந்திடும் போது தாங்கிடும்
தூயவர் தூய பாதை காட்டுவார்
கலங்கிடும் போது காத்திட வல்லவர்
கவலை எல்லாம் மாற்றுவார்
கண்ணீர் துடைத்திட கருணை காட்டிட
தேவன் கரங்களை நீட்டுவார்( 2)
அந்த பாவம் யாவும் பறந்தோட
என்றும் வாழ்வில் நன்மைகள் கூட
நல்ல பாதை சொன்னவர் இயேசு
இன்றே அவர் பாதம் பணிந்திடுவோம்

2. பிறந்தவர் எல்லாம் உயர்ந்தவராக
சிறந்த வழியை சொல்லுவார்
நிறைந்த அன்பால் காலம் எல்லாம்
தெளிந்த அறிவை ஊட்டுவார்
என்றும் கலங்காதே தேவன் இருக்கின்றார்
இன்று புது பாதை காட்டுவார்
அந்த பாவம் யாவும் பறந்தோட
என்றும் வாழ்வில் நன்மைகள் கூட
நல்ல பாதை சொன்னவர் இயேசு
இன்றே அவர் பாதம் பணிந்திடுவோம்

Worship Songs Lyrics,David
Nenje Nee Kalanguvatheno – நெஞ்சே நீ கலங்குவதேனோ : Lyrics Nenje Nee Kalanguvatheno – நெஞ்சே நீ கலங்குவதேனோ : Lyrics Reviewed by Christking on June 13, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.