Urugatho Nenjam - உருகாதோ நெஞ்சம் : Lyrics

உருகாதோ நெஞ்சம் அவர் தானே தஞ்சம்
உனக்காகாக பலியாக வந்தார்
அதட்காக கண்கள் வடியாதோ கண்ணீர்
கல்வாரி காட்சியை கண்டு
1. கனவெல்லாம் துஷ்டம் தீராத கஷ்டம்
கதறிடும் மனிதனைக் கண்டு
கனிவோடு நோக்கி கரம் தொட்டு தூக்கி
கனிவுடன் சுகம் தந்ததாலே
உந்தன் கரங்களில் ஆணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே
2. நடமாட முடியா தடுமாறி கிடந்த
முடவனின் குரல் கேட்டு நின்றே
இடம் தேடி வந்து இதயத்தில் நொந்து
நடமாட செய்ததாலே
உந்தன் கால்களில் ஆணியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே
3. இதயத்தில் பாவம் குடி கொண்டதாலே
இகமதில் அழிக்கின்ற ஆன்மா
பாவத்தில் நின்று ஜீவனை மீட்க
ரட்சித்து வழி தந்ததாலே
உந்தன் இதயத்தில் ஈட்டியோ அரசே
அதுதான் சிலுவையின் பரிசே
Urugatho Nenjam - உருகாதோ நெஞ்சம் : Lyrics
Reviewed by Christking
on
May 01, 2016
Rating:

No comments: