Rasa Rasa Pitha – ராச ராச பிதா : Lyrics - Christking - Lyrics

Rasa Rasa Pitha – ராச ராச பிதா : Lyrics

Rasa Rasa Pitha

ராச ராச பிதா மைந்த தேகலாவுசதா நந்த
யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!

ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக – ராச

1. மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்தர
நேசமே பணியே, தந்திர மோசமே தணியே!
நிறைவான காந்தனே! இறையான சாந்தனே! மறை – ராச

2. ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த
வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே,
பத ஆமனாமனா! சுதனாமனாமனா! சித – ராச

3. மேன்மையா சனனே, நன்மை மேவுபோசனனே தொன்மை
பான்மை வாசனனே, புன்மை பாவ மோசனனே
கிருபா கரா நரா! சருவேசுரா, பரா ஸிரீ – ராச

4. வீடு தேடவுமே, தந்தை நாடு கூடவுமே, மைந்தர்
கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே
நரவேட மேவினான், சுரராடு கோவினான், பர – ராச

Worship Songs Lyrics,David
Rasa Rasa Pitha – ராச ராச பிதா : Lyrics Rasa Rasa Pitha – ராச ராச பிதா : Lyrics Reviewed by Christking on May 30, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.