Yesu Kristu En Jeevan - இயேசு கிறிஸ்து என் ஜீவன் : Lyrics

இயேசு கிறிஸ்து என் ஜீவன்
சாவது ஆதாயமே
வாழ்வது நானல்ல இயேசு என்னில் வாழ்கின்றார்
1. இயேசுவை நான் ஏற்றுக்கொண்டேன்
அவருக்குள் நான் வேர்கொண்டேன்
அவர்மேல் எழும்பும் கட்டடம் நான்
அசைவதில்லை தளர்வதும் இல்லை
2. என்ன வந்தாலும் கலங்கிடாமல்
இடுக்கண் நேரம் ஸ்தோத்தரிப்பேன்
அறிவைக் கடந்த தெய்வீக அமைதி
அடிமை வாழ்வின் கேடயமே
3. எனது ஜீவன் கிறிஸ்துவுடனே
தேவனுக்குள்ளே மறைந்தது
ஜீவன் கிறிஸ்து வெளிப்படும் நாளில்
மகிமையில் நான் வெளிப்படுவேனே
4. கிறிஸ்துவுக்குள்ளே இரத்தத்தினாலே
பாவமன்னிப்பின் மீட்படைந்தேன்
அவரை அறியும் அறிவிலே வளர்வேன்
அவரின் விருப்பம் செய்தே மகிழ்வேன்
Yesu Kristu En Jeevan - இயேசு கிறிஸ்து என் ஜீவன் : Lyrics
Reviewed by Christking
on
April 25, 2016
Rating:

No comments: