Vallamai Vendum - வல்லமை வேண்டும் : Lyrics

வல்லமை வேண்டும் இன்றே வேண்டும்
அக்கினி வேண்டும் எங்கள் சபையிலே
ஆலயம் நிரம்ப ஊழியம் பெருகும்
மகிமையில் வளரும் இந்த நாளிலே
நன்றி சொல்லுவோம் நன்றி சொல்லுவோம்
நன்றி சொல்லுவோம் இயேசுவே (உமக்கே)
1. கிருபை வேண்டுமே உம் வரங்கள் வேண்டுமே
கனிகள் வேண்டுமே வாழ்விலே
அன்பு வேண்டுமே ஜெப ஆவி வேண்டுமே
புது புது பாஷை நமக்கு வேண்டும்
பெரிய காரியம் நாங்கள் செய்திடுவோம்
வல்லமை மேலே வல்லமை வேண்டும்
மகிமையின் மேலே மகிமையே – நன்றி
2. நீர் தொட்டால் போதுமே என் வாழ்க்கை மாறுமே
உம் தொடுதல் வேண்டுமே இயேசுவே
அன்பு கூருவேன் என் வாழ்வின் நாளெல்லாம்
என் உள்ளம் பாடுமே உம்மையே
பரிசுத்தம் வேண்டுமே என் பாவம் மாறுமே
உம் இரத்தம் என்னை கழுவுமே
புது புது பாஷை நமக்கு வேண்டும்
பெரிய காரியம் நாங்கள் செய்திடுவோம்
வல்லமை மேலே வல்லமை வேண்டும்
மகிமையின் மேலே மகிமையே – நன்றி
Vallamai Vendum - வல்லமை வேண்டும் : Lyrics
Reviewed by Christking
on
April 27, 2016
Rating:

No comments: