Devadhi devan en - Lyrics

என்ன ஆனந்தமே
மன்னாதி மன்னன் என்னைத்தேடி வந்தார்
என்ன பேரின்பமே
சந்தோஷமே என் உள்ளத்தில்
நதியாய் பாயுதே
சர்வ வல்லவர் இயேசுவே
என் வாழ்வின் சொந்தமே
ஆனந்த கீதம் என் நாவில் தந்தார்
என் இயேசு நல்லவரே
இரட்சண்ய கீதம் எந்நாளும் பாடி
என் மீட்பரைப் போற்றுவேன்
கட்டுகளையெல்லாம் உடைத்து விட்டார்
களிகூர்ந்து பாடிடுவேன்
கிருபைகள் தந்தார் வல்லமை தந்தார்
எந்நாளும் நன்றி சொல்வேன்
என் ஆத்மநேசர் என் இயேசு ராஜா
என்றென்றும் என் சொந்தமே
எல்லையில்லாத தம் அன்பினாலே
என்னையும் நேசித்தாரே
Devadhi devan en - Lyrics
Reviewed by Christking
on
March 24, 2016
Rating:

No comments: