Aahadhadhu ethuvumillai ummaal - Jebathotta Jeyageethangal Lyrics

Aahadhadhu ethuvumillai – ummaal Aahadhadhu ethuvumillai Akilam anaithayum Undakki aalukindreer 1. Thuthi seyya thodangiyathum ethirikal thangalukkul Vettundu madiyach Seitheer Ummaal aakum, ellam aakum (2) 2. Alangaara vaasaliley alangola mudavanandru Nandanthaney essu Namathil 3. Kolum Kaiyumaaga pilaikka chendrar yakkobu Peruha cheitheer perungootamaai 4. Kanneerai kandadhaley Kallaraikku chenndravanai Karam pidithu thookki vitteer 5. Eessakku jebithathaley rebeccal karuvuttru Erattayargal petreduthaley 6. Eliyaavin vaarthaiyaley saaribath vidhavai veetil Ennai mavu kuraiyavillaiye 7. Jeba veeran dhaniyelai singangalin kugaiyiniley Sethamindri kaapaatrineer 8. Kaanavooril vaarthaisolla Kapparnahoom siruvanangey Sukamaanan anneramey 9. Thanneeraal jaadihalai Keelpadinthu nirappinathaal Thiratchai rasam vandhadhaiya |
ஆகாதது எதுவுமில்ல - உம்மால் ஆகாதது எதுவுமில்ல அகிலம் அனைத்தையும் உண்டாக்கி ஆளுகின்றீர் 1. துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள் வெட்டுண்டு மடியச் செய்தீர் உம்மால் ஆகும், எல்லாம் ஆகும் (2) 2. அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்று நடந்தானே இயேசு நாமத்தில் 3. கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபு பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய் 4. கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனை கரம் பிடித்துத்தூக்கி விட்டீர் 5. ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்று இரட்டையர்கள் பெற்றெடுத்தாளே 6. எலியாவின் வார்த்தையாலே சாறிபாத் விதவை வீட்டில் எண்ணெய் மாவு குறையவில்லையே 7. ஜெப வீரன் தானியேலை சிங்கங்களின் குகையினிலே சேதமின்றிக் காப்பாற்றினீர் 8. கானாவூரில் வார்த்தை சொல்ல கப்பர்நகூம் சிறுவனங்கே சுகமானான் அந்நேரமே 9. தண்ணீரால் ஜாடிகளை கீழ்படிந்து நிரப்பினதால் திராட்சை ரசம் வந்ததையா |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,A
Aahadhadhu ethuvumillai ummaal - Jebathotta Jeyageethangal Lyrics
Reviewed by Christking
on
February 10, 2016
Rating:

No comments: