Yesuvaalae Pidikapattavan - இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் - Christking - Lyrics

Yesuvaalae Pidikapattavan - இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்


Yesuvaalae Pidikapattavan -Avar
Ratthathaalae Kazhuvapattavan -Naan
Yenakkendru Yedhuvumillae
Yibboomi Sonthamillae
Yellaamae Yesu.....Yen Yesu.....
Yellam Yesu Yesu Yesu

1. Paralogam Thaai Veedu
Adhai Theadi Nee Odu
Oruvarum Azhindhu Pogaamalae
Thaayagam Varavaendu Thappaamalae - Namma

2. Anthagaara Yirulinindru
Aachariya Olikkazhaithaar
Azhaithavar Punniyanggal Arivitthida - Indha
Adimaiyai Thaerindheaduthaar

3. Laabamaana Anaithaiyumae
Nashtamendru Karudhugindraen
Yesuvai Arigindra Thaagatthinaal
Yelaamae Yizhandhuvittaen - Naan

4. Paadugal Anubavippaen
Paraloga Dheavanukkai
Kristhuvin Magimai Velippadum Naalil
Kali Koornthu Magizhndhiruppaen

5. Pinnanavai Maranthaen
Munnanavai Naadinaen
Yen Nesar Tharugindra Parisukkaaga
Yilakkai Nokki Thodarugindraen

6. Needhiyai Virumbugiraen
Akkiramam Verukkindraen
Aanandha Thaila Abishegatthaal
Anudhinam Nirambugiraen
இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் - அவர்
இரத்தத்தாலே கழுவப்பட்டவன் - நான்
எனக்கென்று எதுவுமில்ல
இப்பூமி சொந்தமில்ல
எல்லாமே இயேசு.... என் இயேசு
எல்லாம் இயேசு இயேசு இயேசு

1. பரலோகம் தாய்வீடு
அதைத் தேடி நீ ஓடு
ஒருவரும் அழிந்து போகாமலே
தாயகம் வர வேண்டும் தப்பாமலே - நம்ம

2. அந்தகார இருளினின்று
ஆச்சரிய ஒளிக்கழைத்தார்
அழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட - இந்த
அடிமையை தெரிந்தெடுத்தார்

3. இலாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகின்றேன்
இயேசுவை அறிகின்ற தாகத்தினால்
எல்லாமே இழந்து விட்டேன் - நான்

4. பாடுகள் அனுபவிப்பேன்
பரலோக தேவனுக்காய்
கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில்
களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்

5. பின்னானவை மறந்தேன்
முன்னானவை நாடினேன்
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கித் தொடருகின்றேன்

6. நீதியை விரும்புகிறேன்
அக்கிரமம் வெறுக்கிறேன்
ஆனந்த தைல அபிஷேகத்தால்
அனுதினம் நிரம்புகிறேன்


Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,Y
Yesuvaalae Pidikapattavan - இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் Yesuvaalae Pidikapattavan - இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் Reviewed by Christchoir on October 13, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.