Maritha Yesu Uyirthu Vittar Hallelujah - மரித்த இயேசு உயிர்த்து விட்டார்
Maritha Yesu Uyirthu Vittar Hallelujah Mannan Yesu Jeevikkiraar Halleluja Hallelujah Jeevikkiraar -2 Hallelujah Hallelujah Jeevikkiraar -2 1. Maranam Avarai Thaduththu Nirutha Mudiavillaiyae Kallaraiyo Kattikaakka Mudiyavillaiyae Yoodhasingam Krishthuraaja Vetri Petrarae Soerndhupona Maganae Nee Thullipaadidu 2. Kanneerodu Mariyaal Pola Avarai Theduvoem Karthar Yesu Namakkum Indru Kaatchi Tharuvaar Kanivodu Peyar Solli Azhaithiduvaar Kalakamindri Kaalamellam Saatchi Pagarvoem 3. Emmavoor Seedarodu Nadanthu Sendraar Iraivaarthai Pothithu Aarudhal Thandhaar Appampittu Kangalaiyae Thirandhu Vaithaar Andha Yesu Nammodu Nadakkindraar 4. Anchadhae Mudhalum Mudivum Yesuthanae Iranthalum Ennalum Vazhkindravar Naavinalae Arikkai Seidhu Meetpadaivom Naldhorum Pudhubelanal Nirambiduvom |
மரித்த இயேசு உயிர்த்து விட்டார் அல்லேலூயா மன்னன் இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார் - 2 அல்லேலூயா அல்லேலூயா ஜீவிக்கிறார் - 2 1. மரணம் அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே கல்லறையோ கட்டிக்காக்க முடியவில்லையே யூதசிங்கம் கிறிஸ்துராஜா வெற்றி பெற்றாரே சோர்ந்து போன மகனே நீ துள்ளிப் பாடிடு 2. கண்ணீரோடு மரியாள் போல அவரைத் தேடுவோம் கர்த்தர் இயேசு நமக்கும் இன்று காட்சி தருவார் கனிவோடு பெயர் சொல்லி அழைத்திடுவார் கலக்கமின்றி காலமெல்லாம் சாட்சி பகர்வோம் 3. எம்மாவூர் சீடரோடு நடந்து சென்றார் இறைவார்த்தை போதித்து ஆறுதல் தந்தார் அப்பம்பிட்டு கண்களையே திறந்து வைத்தார் அந்த இயேசு நம்மோடு நடக்கின்றார் 4. அஞ்சாதே முதலும் முடிவும் இயேசுதானே இறந்தாலும் எந்நாளும் வாழ்கின்றவர் நாவினாலே அறிக்கை செய்து மீட்படைவோம் நாள்தோறும் புதுபெலனால் நிரம்பிடுவோம் |
Jebathotta Jeyageethangal, Father Berchmans Tamil Christian Songs Lyrics,Tamil Christian Songs Lyrics,M
Maritha Yesu Uyirthu Vittar Hallelujah - மரித்த இயேசு உயிர்த்து விட்டார்
Reviewed by Christchoir
on
October 06, 2015
Rating:
No comments: