Yesu raja um namathai | இயேசு ராஜா உம் நாமத்தை - Lyrics
இயேசு ராஜா உம் நாமத்தை
சொல்லி சொல்லி நான் மகிழ்வேன்
உந்தன் அன்பை என் உள்ளத்தில்
எண்ணி எண்ணி துதிபாடுவேன்
ஆமென் ஆமென் அல்லேலுயா
பாவியாய் வாழ்ந்த எனைத் தேடி வந்தீர்
பரிசுத்த இரத்தம் சிந்தி என்னை மீட்டீர்
பரமனே உம் அன்பு மிகப்பெரியது
பாரினில் நிகரேதும் இல்லாதது
வியாதிகள் வேதனை எனை சூழ்ந்த போதும்
வாழ்ந்திட வழியின்றி கலங்கின நேரம்
வார்த்தையினாலே என்னைத் தேற்றி
வளமான வாழ்வை எனக்குத் தந்தீர்
உலகமே என்னை வெறுத்தாலும்
நண்பர்கள் யாவரும் கைவிட்டாலும்
நீதியின் தேவன் என்னோடு உண்டு
நித்தமும் மகிழ்வுடன் வாழ்ந்திடுவேன்
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Worship Songs Lyrics
Yesu raja um namathai | இயேசு ராஜா உம் நாமத்தை - Lyrics
Reviewed by Christchoir
on
July 22, 2015
Rating:
No comments: