Mannuyire kaakath thannuyir | மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க - Lyrics
மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க
வல்ல பராபரன் வந்தார் வந்தார்
இந்நிலம் புரக்க உன்னதத் திருந்தே
ஏகபராபரன் வந்தார் வந்தார்
வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர்
மகிமைப் பராபரன் வந்தார் வந்தார்
நித்திய பிதாவின் நேய குமாரள்
நேமி அனைத்தும் வாழ வந்தார் வந்தார்
மெய்யான தேவன் மெய்யான மனுடன்
மேசியா ஏசையா வந்தார் வந்தார்
தீவினை நாசர் பாவிகள் நேசர்
தேவ கிறிஸ்தையா வந்தார் வந்தார்
ஜெய அனுகூலர் திவ்விய பாலர்
திரு மனுவேலனே வந்தார் வந்தார்
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Easter Songs Lyrics
Mannuyire kaakath thannuyir | மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க - Lyrics
Reviewed by Christchoir
on
July 14, 2015
Rating:
No comments: