Maanida Uruvil / மானிட உருவில் அவதரித்த - Christking - Lyrics

Maanida Uruvil / மானிட உருவில் அவதரித்த



மானிட உருவில் அவதரித்த
மாசுடர் ஒளியே கிறிஸ்தேசுவே

ஆத்தும மீட்பையும் ஏற்படுத்த
அவனியிலே உனக்காய் உதித்தார்
அண்டி வருவாய் வேண்டி அடைவாய்
அண்ணலே ஆத்தும வினை நீக்குவார்

கூவி அழைப்பது தேவ சத்தம்
குருசில் வடிவது தூய ரத்தம்
பாவ மன்னிப்பு ஆத்ம இரட்சிப்பு
பாக்கியம் நல்கிட அவரே வழி

இயேசுவின் நாமத்தில் வல்லமையே
இதை நாடுவோர்க்கு விடுதலையே
துன்ப கட்டுகள் காவல் சிறைகள்
இன்று அகற்றுவார் நீயும் நம்பி வா

அற்புதங்கள் கர்த்தர் செய்திடுவார்
அதிசயங்கள் அவர் காட்டிடுவார்
உண்மை நிறைந்த உள்ளம் திறந்து
உன் கர்த்தர் இயேசுவை விசுவாசிப்பாய்

கர்த்தர் உன்னை இனி கைவிடாரே
கடைசி வரை தளராதே நம்பு
என்றும் நல்லவர் கர்த்தர் வல்லவர்
இயேசுவிடம் வந்தால் புறம்பே தள்ளார்





Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Good Friday Songs
Maanida Uruvil / மானிட உருவில் அவதரித்த Maanida Uruvil / மானிட உருவில் அவதரித்த Reviewed by Christchoir on July 04, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.