Kolkoda malai meethile / கொல்கொதா மலை மீதிலே - Christking - Lyrics

Kolkoda malai meethile / கொல்கொதா மலை மீதிலே



கொல்கொதா மலை மீதிலே
சிலுவை சுமந்தேகினார்
உன்னத பிதாவின் சித்தமாய்
உத்தமர் இரத்தம் சிந்தினார்

அந்தோ எருசலேமே
ஆண்டவர் பவனி வந்தார்
அந்த நாளை நீ மறந்தாய்
அன்பரோ கண்ணீர் சிந்தினார்

மேனியில் கசையடிகள்
எத்தனை வசை மொழிகள்
அத்தனையும் அவர் உனக்காய்
அன்புடன் சுமந்து சசித்தார்

உத்தம தேவ மைந்தனே
சுத்தமாய் ரத்தம் சிந்தியே
நித்திய வாழ்வு தனையே
நீசனாம் எனக்களித்தார்

செந்நீரோ கண்ணீராய் மாறி
தரணியில் பாய்ந்ததங்கே
உன்நிலை நினைத்தவரே
தன்நிலை மறந்து சகித்தார்
வஞ்சக உலகினிலே
வணங்கா கழுத்துடனே
வழிபோகும் ஆத்துமாவே
வந்திடு நீ இயேசுவண்டை





Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Good Friday Songs
Kolkoda malai meethile / கொல்கொதா மலை மீதிலே Kolkoda malai meethile / கொல்கொதா மலை மீதிலே Reviewed by Christchoir on July 04, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.