Enthan yesu enakku nallavar | எந்தன் இயேசு எனக்கு நல்லவர் - Lyrics - Christking - Lyrics

Enthan yesu enakku nallavar | எந்தன் இயேசு எனக்கு நல்லவர் - Lyrics



எந்தன் இயேசு எனக்கு நல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர்
ஆபத்தில் வியாதியில் என் பிரயாசங்களில்
அவர் என்றுமே போதுமானவர்

கல்வாரி மலைமேல் ஏறியே
முள் முடி சிரசில் சூடியே
என் வேதனை யாவையும் நீக்கி என்னில்
புது ஜீவனை ஊற்றினதால்

அவர் ஆதியும் அந்தமுமே
தெய்வ சிநேகத்தின் பிறப்பிடமே
பதினாயிரங்களில் மிக சிறந்தவரை
துதிக்கப் படத்தக்கவரே

புவி யாத்திரை மிகக் கடினம்
தேவ கிருபைகள் எந்நேரமும்
பகல் மேகஸ்தம்பம் ராவில் அக்கினிஸ்தம்பம்
அனுதினம் என்னை வழி நடத்தும்

எந்தன் ஏக்கம் எல்லாம் நீங்கிப்போம்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவார்
இயேசு இராஜாவாய் வானத்தில் வெளிப்படும் நாள்
நான் அவருடன் பறந்திடுவேன்






Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Worship Songs Lyrics
Enthan yesu enakku nallavar | எந்தன் இயேசு எனக்கு நல்லவர் - Lyrics Enthan yesu enakku nallavar | எந்தன் இயேசு எனக்கு நல்லவர் - Lyrics Reviewed by Christchoir on July 22, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.