Amen alleluia amen | ஆமென் அல்லேலூயா - Lyrics - Christking - Lyrics

Amen alleluia amen | ஆமென் அல்லேலூயா - Lyrics



ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
மகத்துவ தம்பரா பரா - ஆமென் அல்லேலூயா
ஜெயம் ஜெயம் ஆனந்த ஸ்தோத்திரா

ஆம் அனாதி தந்தார் வந்தார் இறந்
துயிர்த்தெழுந்தாரே உன்னதமே

வெற்றி கொண்டார்ப்பரித்து கொடும்
வேதாளத்தை சங்கரித்து முறித்து
பத்ராசனக் கிறிஸ்து -மரித்து
பாடுபட்டு தரித்து முடித்தார்

வேதம் நிறைவேற்றி மெய் தோற்றி
மீட்டுக் கரையேற்றி -பொய் மாற்றி
பாவிகளை தேற்றி கொண்டாற்றி
பத்ராசனத் தேற்றி வாழ்வித்தார்

சாவின் கூர் ஒடிந்து மடிந்து
தடுப்புச் சுவர் இடிந்து-விழுந்து
ஜீவனை விடிந்து தேவாலயத்
திரை ரண்டாய் கிழிந்து ஒழிந்தது

தேவக் கோபந்தீர்ந்து அலகையின்
தீமை எல்லாம் சேர்த்து முடிந்தது
ஆவலுடன் சேர்ந்து பணிந்து
கொண்டாடி களி கூர்ந்து மகிழ்ந்து





Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Easter Songs Lyrics
Amen alleluia amen | ஆமென் அல்லேலூயா - Lyrics Amen alleluia amen | ஆமென் அல்லேலூயா - Lyrics Reviewed by Christchoir on July 10, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.