Nilai Illa Ulagam Idhu / நிலையில்லா உலகம் இது - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Nilai Illa Ulagam Idhu / நிலையில்லா உலகம் இது - Tamil Christian Songs Lyrics



நிலையில்லா உலகம் இது நினைவினில் எழுதி விடு
நிலையான நகரம் உண்டு நித்திய சந்தோஷம் நமக்கு உண்டு
நீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?
இயேசுவை சந்திப்பாயா?

1. மலரை போன்ற மனித வாழ்வு உலர்ந்து வாடிடுமே
மனதில் தோன்றும் வழியினில் சென்று
வேதனை அடையாதே
பாவத்தின் சம்பளம் மரணம் என்று நீ அறியாமல் வாழுவதேன்
பரிசுத்த தேவனின் கரங்களில் வந்தால் பாக்கியம் நிச்சயமே
நீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?
இயேசுவை சந்திப்பாயா?

2. நிழலை போன்ற உலகின் வாழ்வு கடந்து போய் விடுமே
நிஜங்கள் என்ன என்பதை அறிந்து வாழ்ந்திட அவசியமே
வல்லவர் இயேசுவின் வருகை ஒரு நாள்
விரைவினில் வந்திடுமே
மனதினில் அவரை ஏற்றவர் மட்டும் மறுரூபம் அடைவாரே
நீயும் சிந்திப்பாயா? நீயும் சிந்திப்பாயா?
இயேசுவை சந்திப்பாயா?

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Nilai Illa Ulagam Idhu / நிலையில்லா உலகம் இது - Tamil Christian Songs Lyrics Nilai Illa Ulagam Idhu / நிலையில்லா உலகம் இது - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 13, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.