Neeye Nirantharam / நீயே நிரந்தரம் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Neeye Nirantharam / நீயே நிரந்தரம் - Tamil Christian Songs Lyrics



பல்லவி

நீயே நிரந்தரம், இயேசுவே என் வாழ்வில் நீயே நிரந்தரம்
ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...
 
அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் - (2)
நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம், நீயே நிரந்தரம்
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் ஆ...ஆ... --- அம்மையப்பன்

சரணங்கள்

1. தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம்
நான் சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் - (2)
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம், நீயே நிரந்தரம்
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் --- அம்மையப்பன்

2. செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நிலை வாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம்
அதன் விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் - (2)
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம், நீயே நிரந்தரம்
நிரந்தரம், நிரந்தரம், நீயே நிரந்தரம் --- அம்மையப்பன்

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Neeye Nirantharam / நீயே நிரந்தரம் - Tamil Christian Songs Lyrics Neeye Nirantharam / நீயே நிரந்தரம் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 13, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.