Nandri Endru Solluvom / நன்றி என்று சொல்லுவோம் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Nandri Endru Solluvom / நன்றி என்று சொல்லுவோம் - Tamil Christian Songs Lyrics



நன்றி என்று சொல்லுவோம்
நல்ல தேவன் கிருபை செய்தார்

நன்மைகளை நினைத்துக் கொண்டு
நன்றியுள்ள துதியுடன்
நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசையா

உங்க ஜீவனை தந்தீர் உமக்கு நன்றியப்பா
என் பாவத்தை சுமந்தீர் உமக்கு நன்றியப்பா
சாப நோய்களை எல்லாம் முறியடித்தீரே
புது வாழ்க்கையை தந்து நல்ல சந்தோஷம் தந்தீர்
நன்மைகளை நினைத்துக் கொண்டு
நன்றியுள்ள துதியுடன்
நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசையா

பேர் சொல்லி அழைத்தீர் உமக்கு நன்றியப்பா
உங்க அன்பை அள்ளித் தந்தீர் உமக்கு நன்றியப்பா
என்னை வாலாக்காமல் தலையாக்கினீர்
என்னை கீழாக்காமல் மேலாக்கினீர்
நன்மைகளை நினைத்துக் கொண்டு
நன்றியுள்ள துதியுடன்
நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசையா

வெண்கல கதவுகள் உடைத்து விட்டீரே
இரும்பு தாழ்ப்பாக்கள் முறித்து விட்டீரே
நல்ல பொக்கிஷங்களை நல்ல ஆசீர்வாதத்தை
எனக்கு தந்தீரே அநாதி பாசத்தால்
நன்மைகளை நினைத்துக் கொண்டு
நன்றியுள்ள துதியுடன்
நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசையா

பரலோகில் என்னையும் நீர் கொண்டு சொல்லுவீர்
பிதாவின் மகிமையில் என்னை உட்கார வைப்பீர்
நோய்களும் இல்லை சாப பேயும் அங்கில்லை
பரிசுத்த ஆவி உன்னை வழி நடத்திடுவார்
நன்மைகளை நினைத்துக் கொண்டு
நன்றியுள்ள துதியுடன்
நன்றி நன்றி ஐயா
நன்றி இயேசையா

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Nandri Endru Solluvom / நன்றி என்று சொல்லுவோம் - Tamil Christian Songs Lyrics Nandri Endru Solluvom / நன்றி என்று சொல்லுவோம் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on April 13, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.