Nadu Kulir Kalam / நடுக் குளிர் காலம் - Tamil Christmas Songs Lyrics - Christking - Lyrics

Nadu Kulir Kalam / நடுக் குளிர் காலம் - Tamil Christmas Songs Lyrics


1. நடுக் குளிர் காலம் கடும் வாடையாம்
பனிக்கட்டிபோலும் குளிரும் எல்லாம்
மூடுபனி ராவில் பெய்து மூடவே
நடுக் குளிர் காலம் முன்னாளே

2. வான் புவியும் கொள்ளா ஸ்வாமி ஆளவே
அவர்முன் நில்லாது அவை நீங்குமே
நடுக் குளிர் காலம் தெய்வ பாலர்க்கே
மாடு தங்கும் கொட்டில் போதுமே

3. தூதர் பகல் ராவும் தாழும் அவர்க்கு
மாதா பால் புல் தாவும் போதுமானது
கேருபின் சேராபின் தாழும் அவர்க்கே
தொழும் ஆடுமாடும் போதுமே

4. தூதர் தலைத்தூதர் விண்ணோர் திரளும்
தூய கேரூப்ப சேராப் சூழத் தங்கினும்
பாக்கிய கன்னித் தாயே நேச சிசு தான்
முக்தி பக்தியோடு தொழுதாள்

5. ஏழை அடியேனும் யாது படைப்பேன்?
மந்தை மேய்ப்பனாயின் மறி படைப்பேன்
ஞானி ஆயின் ஞானம் கொண்டு சேவிப்பேன்
யானோ எந்தன் நெஞ்சம் படைப்பேன்

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Tamil Christmas Songs Lyrics

Nadu Kulir Kalam / நடுக் குளிர் காலம் - Tamil Christmas Songs Lyrics Nadu Kulir Kalam / நடுக் குளிர் காலம் - Tamil Christmas Songs Lyrics Reviewed by Christchoir on April 24, 2015 Rating: 5
Powered by Blogger.