Mesiyava Mesiyava / மேசியாவே மேசியாவே - Tamil Christmas Songs Lyrics - Christking - Lyrics

Mesiyava Mesiyava / மேசியாவே மேசியாவே - Tamil Christmas Songs Lyrics



மேசியாவே மேசியாவே
பூலோகம் வந்தீரே
நாங்களுந்தான் பாடணும்
நாங்களுந்தான் ஆடணும்
உம்முடைய பிறப்பைக் கொண்டாடணும்

1. பெத்தலகேம் என்னும் ஊரினிலே
இரட்சகர் மனுவாக மலர்ந்ததாலே
வானவர்கள் வாழ்த்திடவே
வையகமும் மகிழ்ந்திடவே
கொண்டாட்டம் கொண்டாட்டம்
கொண்டாட்டமே

Happy Christmas
Merry Christmas
Happy Christmas --- மேசியாவே

2. பூலோக மாந்தர்க்கு நற்செய்தியே
சந்தோஷம் சமாதானம் பெருகிடவே
கந்தைத்துணி முன்னணையில்
இறைமைந்தன் உறங்கிடவே
அன்னை மரி தாலாட்டி மகிழ்ந்தாளே

Happy Christmas
Merry Christmas
Happy Christmas --- மேசியாவே

3. மன்னிப்பில் மாட்சிமை உண்டெனவே
உரைத்திட்ட திரு மைந்தன் பிறந்ததாலே
எண்ணில்லா நன்மைகள்
என்றென்றும் கிடைத்திடவே
மன்னிப்போம் மகிழ்வோடு தவறுகளை

Happy Christmas
Merry Christmas
Happy Christmas --- மேசியாவே

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics,Tamil Christmas Songs Lyrics
Mesiyava Mesiyava / மேசியாவே மேசியாவே - Tamil Christmas Songs Lyrics Mesiyava Mesiyava / மேசியாவே மேசியாவே - Tamil Christmas Songs Lyrics Reviewed by Christchoir on April 24, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.