Yesuvin karankalai / இயேசுவின் கரங்களைப் - Tamil Christian Songs Lyrics
இயேசுவின் கரங்களைப் பற்றிக்கொண்டேன் நான்
இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டேன்
எதற்கும் பயம் இல்லையே
இனியும் கவலை எனக்கில்லையே
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
இயேசுவுக்காய் அவமானம் ஏற்றுக்கொண்டேன்
இனிவரும் பலன் மேல் நோக்கமானேன்
அழிந்து போகும் பாராட்டு வேண்டாமே
அரவணைக்கும் இயேசு போதும் போதுமே
அதிவிரைவில் நீங்கும் இந்த உபத்திரவம்
அதிகமான கனமகிமை உண்டாக்கும்
காண்கின்ற எல்லாமே அநித்தியம்
காணாதவைகளோ நித்தியம்
பகைவர்க்கு அன்பு காட்டிடுவேன்
வெறுப்பவர்க்கு நன்மை செய்திடுவேன்
சபிப்பவர்க்கு ஆசி கூறிடுவேன்
தூற்றுவோர்க்காக ஜெபித்திடுவேன்
Yesuvin karankalai / இயேசுவின் கரங்களைப் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
March 22, 2015
Rating:
No comments: