Yesuva Ummai Dhanithaal / இயேசுவே உம்மைத் தியானித்தால் -Tamil Christian Songs Lyrics
1. இயேசுவே, உம்மை தியானித்தால்
உள்ளம் கனியுமே;
கண்ணார உம்மைக் காணுங்கால்
பரமானந்தமே.
2. மானிட மீட்பர் இயேசுவின்
சீர் நாமம் போலவே,
இன் கீத நாதம் ஆய்ந்திடின்
உண்டோ இப்பாரிலே?
3. நீர் நொறுங்குண்ட நெஞ்சுக்கு
நம்பிக்கை ஆகுவீர்;
நீர் சாந்தமுள்ள மாந்தர்க்கு
சந்தோஷம் ஈகுவீர்.
4. கேட்போர்க்கும் தேடுவோர்க்கும் நீர்
ஈவீர் எந்நன்மையும்;
கண்டடைந்தோரின் பாக்கிய சீர்
யார் சொல்ல முடியும்?
5. இயேசுவின் அன்பை உணர்ந்து
மெய் பக்தர் அறிவார்;
அவ்வன்பின் ஆழம் அளந்து
மற்றோர் அறிந்திடார்.
6. இயேசுவே, எங்கள் முக்தியும்
பேரின்பமும் நீரே;
இப்போதும் நித்திய காலமும்
நீர் எங்கள் மாட்சியே.
Yesuva Ummai Dhanithaal / இயேசுவே உம்மைத் தியானித்தால் -Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
March 24, 2015
Rating:
No comments: