Yenkumpugal yesu rajanukae / எங்கும் புகழ் யேசு ராசனுக்கே - Tamil Christian Songs Lyrics
எங்கும் புகழ் யேசு ராசனுக்கே
எழில் மாட்சிமை வளர் வாலிபரே
உங்களை அல்லவோ உண்மை வேதம் காக்கும்
உயர்வீரரெனப் பக்தர் ஒதுகிறார்
- எங்கும்
அயிரத் தொருவர் ஆவீரல்லோ நீரும்
அதை அறிந்து துதி செய்குவீர்
தாயினும் மடங்கு சதம் அன்புடைய
சாமி யேசுவுக்கியம் தந்திடுவீர்
- எங்கும்
கல்வி கற்றோர்கள் கல்வி கல்லாதோர்க்குக்
கடன்பட்டவர்; கண்திறக்கவே
பல்வழி அலையும் பாதைத்தப்பினோரைப்
பரிந்து திருப்ப நிதம் பாத்திடுவீர்
- எங்கும்
சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச் செல்ல
சேர வலிபர் நீரே தேவையே
கர்த்தரின் பாதத்தில் காலைமாலை தங்கிக்
கருணை நிறை வசனம் கற்றிடுவீர்
- எங்கும்
Yenkumpugal yesu rajanukae / எங்கும் புகழ் யேசு ராசனுக்கே - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
March 22, 2015
Rating:
No comments: