Unnathamanavarin uyar / உன்னத மானவரின் உயர் மறைவில் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Unnathamanavarin uyar / உன்னத மானவரின் உயர் மறைவில் - Tamil Christian Songs Lyrics



உன்னத மானவரின் உயர் மறைவில் இருக்கிறவன்
சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் (2)
இது பரம சிலாக்கியமே

அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம்
சிறகுகளால் மூடுவார் (2)

தேவன் என் அடைக்கலமே என் கோட்டையும் அரணுமவர்
அவர் சத்தியம் பரிசையும் கேடகமாம் (2)
என்; நம்பிக்கையும் அவரே

                                                                                                      - அவர்
இரவின் பயங்கரத்திற்கும் பகலில் பரக்கும் அம்புக்கும்
இரவில் நடமாடும் கொள்ளை நோய்க்கும் (2)
நான் பயப்படவே மாட்டேன்

                                                                                                     - அவர்
ஆயிரம் பதினாயிரம் பேர்கள் உன் பக்கம் விழுந்தாலும்
அது ஒரு காலத்தும் உன்னை அணுகிடாதே (2)
உன் தேவன் உன் தாபரமே

                                                                                                     - அவர்
தேவன் உன் அடைக்கலமே ஒரு பொல்லாப்பும் உன்னைச் சேருமோ
ஒரு வாதையும் உன் கூடாரத்தையே (2)
அணுகாமலே காத்திடுவார்

                                                                                                      - அவர்

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Unnathamanavarin uyar / உன்னத மானவரின் உயர் மறைவில் - Tamil Christian Songs Lyrics Unnathamanavarin uyar / உன்னத மானவரின் உயர் மறைவில் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 22, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.