Unnakoruvar Irukirar / உனக்கொருவர் இருக்கிறார் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Unnakoruvar Irukirar / உனக்கொருவர் இருக்கிறார் - Tamil Christian Songs Lyrics



    உனக்கொருவர் இருக்கிறார்
    உன்னை விசாரிக்கத் துடிக்கிறார்
    உன்னையும் என்னையும் இயேசு நேசிக்கிறார்
    நம்மை உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறார் (2)

    ஜாதி சனம் மறந்திட்டாலும் மறந்திடாதவர்
    ஜோதிகளின் பிதாவாம் இயேசுவானவர் (2)
    சூழ்நிலைகள் மாறினாலும் இயேசு உன்னை மறப்பதில்லை (2)
    சிலுவையில் ஜீவன் விடும் நேரத்திலும் வெறுக்கவில்லை

                                                                                       - உனக்கொருவர்
    ஆகாதவன் என்று உன்னை யார் தள்ளினாலும்
    ஆபிரகாமின் தேவன் உன்மைத் தள்ளிடுவாரோ (2)
    தஞ்சம் என்று வருபவரைத் தள்ளாத நேசரவர் (2)
    அஞ்சிடாதே மகனே மகளே என்று உன்னை தேற்றிடவே

                                                                                      - உனக்கொருவர்
    வியாதியஸ்தன் என்று உன்னை ஒதுக்கி வைப்பார்கள்
    வேண்டாத வார்த்தைகளைச் சொல்லி புண்படுத்துவார்கள் (2)
    வாழ்வதாஇ சாவதா என்று நீ அழுது புலம்விடுவாய் (2)
    வாழ்த்தான் வேண்டும் என்று வியாதியிலே சுகம் தரவே

                                                                                         - உனக்கொருவர்

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Unnakoruvar Irukirar / உனக்கொருவர் இருக்கிறார் - Tamil Christian Songs Lyrics Unnakoruvar Irukirar / உனக்கொருவர் இருக்கிறார் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 21, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.