Thotu sugam akkumia / தொட்டு சுகமாக்குமையா இயேசுவே - Tamil Christian Songs Lyrics
தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
நீ தொட்டால் போதும் எங்கள் வாழ்க்கை மாறுமே (2)
மாறுமே எல்லாம் மாறுமே
எட்டிக்காய் போல் கசக்கும் எந்தன் வாழ்க்கையை
உன் பாசக்கைகள் எட்டி என்றும் தொடருமே
கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதம்
கர்த்தா எந்தன் கதறல் கேளும்
தொடனுமே என்னை தொடனுமே (2)
கடனும் முடனும் என்னை முடக்க முடியாதே
கடல் மேல் நடந்த கர்த்தர் என்னோடிருக்கின்றார்
கடல் மேல் என்னை நடக்க செய்வார்
கடனை எல்லாம் மாறச்செய்வார்
மாறுமே எல்லாம் மாறுமே (2)
குறைவை எண்ணி புலம்புவதை நிறுத்துவேன்
நிறைவாய் என்னை நிரப்புபவர் இருப்பதால்
இல்லை என்பது எனக்கு இல்லை
தொல்லை என்பது துளியும் இல்லை
இல்லையே தொல்லை இல்லையே (2)
Thotu sugam akkumia / தொட்டு சுகமாக்குமையா இயேசுவே - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
March 21, 2015
Rating:
No comments: