Thothira tuthi pathira / தோத்திர பாத்திரனே தேவா - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Thothira tuthi pathira / தோத்திர பாத்திரனே தேவா - Tamil Christian Songs Lyrics



தோத்திர பாத்திரனே தேவா
தோத்திரந் துதியுமக்கே
நேத்திரம் போல் முழு ராத்திரியுங்காத்தோய் (2)
நித்தியம் துதியுமக்கே

சத்துரு பயங்களின்றி நல்ல
நித்திரை செய்ய எமை
பத்திரமாயச்;சீ ராட்டி உறக்கியே (2)
சுற்றிலுங் கோட்டையானாய்

விடிந்திருள் ஏகும்வரை கண்ணின்
விழிகளை முடாமல்
துடி கொள் தாய்போல் படிமிசை எமது (2)
துணையேன காத்தவனே

காரிருள் அகன்றிடவே நல்ல
கதிரொளி திகழ்ந்திடவே
பரிதைப் புரட்டி உருளச்செய் தே (2)
பாங்கு சீராக்கி வைத்தாய்

இன்றைத் தினமதிலும் தொழில்
எந்தெந்த வகைகளிலும்
உம் திரு மறைப்படி ஓழுகிட எமக்கருள் (2)
ஊன்றியே காத்துக் கொள்வாய்

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Thothira tuthi pathira / தோத்திர பாத்திரனே தேவா - Tamil Christian Songs Lyrics Thothira tuthi pathira / தோத்திர பாத்திரனே தேவா - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 21, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.