Tholukirom yengal pithavae / தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

Tholukirom yengal pithavae / தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tamil Christian Songs Lyrics



    தொழுகிறோம் எங்கள் பிதாவே
    பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
    பரிசுத்த அலங்காரத்துடனே
    தரிசிப்பதினால் சரணம்! சரணம்!

    வெண்மையும் சிவப்புமானவர்
    உண்மையே உருவாய்க் கொண்டவர்
    என்னையே மீட்டுக் கொண்டவர்
    அன்னையே இதோ சரணம்! சரணம்!

                                                                      - தொழுகிறோம்
    தலை தங்க மயமானவர்
    தலை மயிர் சுருள் சுருளானவர்
    பதினாயிரம் பேரில் சிறந்தவர்
    பதினாயிரமாம் சரணம்! சரணம்!

                                                                     - தொழுகிறோம்
    கண்கள் புறாக் கண்கள் போல
    கன்னங்கள் பாத்திகள் போல
    சின்னங்களும் சிறந்ததாலே
    எண்ணில்லாத சரணம்! சரணம்!

                                                                      - தொழுகிறோம்
    கரங்கள் பொன் வளையங்கள் போல
    நிறங்கள் தந்தத்தைப் போல
    கால்களும் கல் தூண்கள் போல
    காண்பதாலே சரணம்! சரணம்!

                                                                     - தொழுகிறோம்
    சமஸ்த சபையின் சிரசே
    நமஸ்காரம் எங்கள் அரசே

Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Tholukirom yengal pithavae / தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tamil Christian Songs Lyrics Tholukirom yengal pithavae / தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 21, 2015 Rating: 5

No comments:

Powered by Blogger.