Sothitam padiyae pootriduvom / தோத்திரம் பாடியே போற்றிடுவேன் - Tamil Christian Songs Lyrics
தோத்திரம் பாடியே போற்றிடுவேன்
தேவாதி தேவனை இயேசுமா ராஜனை
வாழ்த்தி வணங்கிடுவேன் (2)
அற்புதமான அன்பே என்னில்
பொற்பரன் பாராட்டும் தூய அன்பே
என்றும் மாறா தேவ அன்பே
என்னுள்ளம் தங்கும் அன்பே - (2)
- தோத்திரம்
ஜோதியாய் வந்த அன்பே பூவில்
ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே
தியாகமான தேவ அன்பே
திவ்ய மதுர அன்பே - (2)
- தோத்திரம்
மாய உலக அன்பை நம்பி
மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே
என்னை வென்ற தேவ அன்பே
என்னில் பொங்கும் பேரன்பே - (2)
- தோத்திரம்
Sothitam padiyae pootriduvom / தோத்திரம் பாடியே போற்றிடுவேன் - Tamil Christian Songs Lyrics
Reviewed by Christchoir
on
March 21, 2015
Rating:
No comments: